சென்னையில் முதலமைச்சரின் இல்லத்திற்கும், கட்சி அலுவலகத்திற்கு செல்லும் வழியில் இடையில் அமைந்துள்ள தேனாம்பேட்டையில், போக்குவரத்தை கட்டுப்படுத்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலில் எந்த வண்ண விளக்கு எரிந்தாலும், தூரத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளின் கண்களுக்கு புலப்படாத வகையில் மிகவும் மங்கலான நிலையில் எரிந்து கொண்டுள்ளது.

பச்சை விளக்கு எரிவதாக நினைத்து வேகமாக வரும் வாகன ஓட்டிகள் சிக்னல் அருகில் வந்த பின்னரே தெரிந்துகொள்ள முடிவதற்குள் அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது. எனவே உடனடியாக தேனாம்பேட்டையில் இருந்து ஆழ்வார்பேட்டை செல்லும் வழியிலும், அதேபோல் எதிர்ப்புறம் நந்தனத்தில் இருந்து அண்ணா சாலை செல்லும் வழியில் உள்ள சிக்னல், இந்த இரண்டு சிக்னல்களையும் உடனடியாக நவீன எல்இடி விளக்குகளை போக்குவரத்து போலீசார் பொருத்த வேண்டும்.
சைதாப்பேட்டை வரை நவீன உயர் மட்ட மேம்பாலம் அமைத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க முனையும் அரசு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கை.

Related Posts
🔬தமிழ்நாட்டில் ரூ.250 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் மற்றும் VLSI மையம்: AI எதிர்காலத்திற்கான அடித்தளம்!
“தமிழ்நாட்டில் AI வளர்ச்சி வேகத்தில் பின்தங்கியிருக்கிறதா?”- ஓர் அலசல்!
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த புரிதல் மற்றும் வளர்ச்சி!