சுபகிருது ஆண்டு
சித்திரை 20
1நாள் :செவ்வாய்கிழமை (03.05.2022)
2,நட்சத்திரம்: ரோஹிணி 03:18 AM வரை பிறகு மிருகசீரிடம்
3,திதி : திருதியை நாள் முழுவதும்
4,யோகம் : அமிர்த – சித்த யோகம்
5,கரணம் : தைதுலம்
நல்லநேரம் : காலை 7.30 – 8.30 / மாலை 4.30 – 5.30
செவ்வாய்க்கிழமை
சுபஹோரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை
சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்
இன்று:அக்ஷய திரிதியை
ரம்ஜான் பண்டிகை
நல்ல நேரம்
07:30 – 08:30 கா / AM
04:30 – 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
11:00 – 12:00 கா / AM
07:30 – 08:30 மா / PM
இராகு காலம்
03.00 – 04.30
எமகண்டம்
09.00 – 10.30
குளிகை
12.00 – 01.30
சூலம்: வடக்கு
பரிகாரம்- பால்
சந்திராஷ்டமம்
சுவாதி
மேல் நோக்கு நாள்
லக்னம்:மேஷ லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 39
சூரிய_உதயம்
Sun Rise 05:56 காலை / AM
இன்றைய_ராசிபலன்
💐மேஷம்
மேஷம்: குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும் வராது என்றிருந்த பணம் தற்போதுகைக்கு வந்துசேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.
💐ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி இருக்கும். நண்பர்கள் உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
💐மிதுனம்
மிதுனம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் கணிச மாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.
💐கடகம்
கடகம்: வெளிவட்டாரத்தில் அந் தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். இனிமையான நாள்.
💐சிம்மம்
சிம்மம்: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அந்தஸ்து உயரும் நாள்.
💐கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.
💐துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறைகூறிக் கொண்டிருக்க வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.
💐விருச்சிகம்
விருச்சிகம்: சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மகிழ்ச்சியான நாள்.

💐தனுசு
தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
💐மகரம்
மகரம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும் புதுமை படைக்கும் நாள்.
💐கும்பம்
கும்பம்: அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
💐மீனம்
மீனம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

Related Posts
காசிக்கு சமமான ஸ்தலம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்!
இன்றைய பஞ்சாங்கம் & ராசி பலன்!
மகிமைகள் தரும் மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்-!