தஞ்சாவூர் களிமேட்டில் 94வது ஆண்டு அப்பர் குருபூஜை நடைபெற்றது. இதில் தேரோட்டம் நள்ளிரவில் நடத்தப்படும். தஞ்சை பூதலூர் சாலையில் தேர் வந்து கொண்டிருந்த போது வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது வளைவில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கின் மீது தேர் உரசியது. உயர் அழுத்த மின் கம்பி மரத்தால் வடிவமைக்கப்பட்டிருந்த தேர் மீது உரசிய நொடியில் தீப்பற்றிக் கொண்டது. அதிகாலை என்பதாலும், தேர் பவனி வருகிற காரணத்தாலும் தெருக்களில் மின்விளக்குகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. இந்த தீ மளமளவென தேர் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த தீ விபத்தின் காரணமாக கரும்புகை சூழ்ந்தது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனைக் கண்டு தேருக்கு அருகில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தீ விபத்தில் தேருக்கு மின் விளக்கிற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. அதன் ஆப்பரேட்டர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியாகினர் . மேலும் இந்த திடீர் தீ விபத்தில் சிக்கிய 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் தீயில் கருகியும், மின்சாரம் பாய்ந்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். முதல்வர் பாதிப்படைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் நிவாரணத் தொகையும் வழங்கினார். இந்நிலையில் நாளை பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன. அத்துடன் பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது
நடப்பாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா ஏப்ரல் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடைபெற உள்ளது. இதனையடுத்து உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு சித்திரைத் தேர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அதிகாலை 5.30 மணி முதல் அதிகாலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளுகிறார்.

சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. கீழச்சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு தேர் தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து தேர் மீண்டும் நிலையை அடையும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர் உலா வரும் வீதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ல் காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும் என கலெக்டர் அறித்துள்ளார். இது தவிர மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புத்துறையினர் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Posts
காசிக்கு சமமான ஸ்தலம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்!
இன்றைய பஞ்சாங்கம் & ராசி பலன்!
மகிமைகள் தரும் மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்-!