அரசினால் தடை செய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்கும் குட்கா, பான்மசாலா விற்ற கடைகளுக்கு பழனி நகரில் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டது
பழனி நகர் பகுதிகளில் அரசினால் தடை செய்யப்பட்ட புற்றுநோயை உண்டாக்கக்கூடிய குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், கணேஷ் புகையிலை, Cool lip போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த கடைகளில் காவல்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து கடையின் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறை, பழனி நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் மேற்படி கடைகளுக்களின் வணிக உரிமத்தை ரத்து செய்யப்பட்டு நோட்டீஸ் சார்பு செய்யப்பட்டது. ஆகையால் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்ட கடையில் திறந்து விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை.
எனவே கடையை அடைத்துள்ளனர். கடை நடத்துவோர் இனிமேல் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்க மாட்டேன் என்ற உறுதியுடன் காவல்துறையினரிடம் தடையில்லா சான்று பெற்று மீண்டும் வணிக உரிமம் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் அறிவிப்பு கொடுத்துள்ளனர்.எனவே கடை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையின் அபராத தொகையை செலுத்திய பின்பு, பழனி நகராட்சியில் வணிக உரிமம் பெற்றபின்புதான் கடையை திறக்க முடியும்.
மேலும் இதுபோன்று சட்டவிரோதமான அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா
விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மற்றும் கடைகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை, பழனி நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts
🔬தமிழ்நாட்டில் ரூ.250 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் மற்றும் VLSI மையம்: AI எதிர்காலத்திற்கான அடித்தளம்!
“தமிழ்நாட்டில் AI வளர்ச்சி வேகத்தில் பின்தங்கியிருக்கிறதா?”- ஓர் அலசல்!
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த புரிதல் மற்றும் வளர்ச்சி!