May 26, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

இனி கவர்னர் இல்லை- முதல்வரே!! சட்டமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றம்!!

பல்கலைக்கழக வேந்தர்களை தமிழக அரசே அறிவிக்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் நேற்று சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இன்று அதற்கான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

secretariot

இந்நிலையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இணை வேந்தராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியனும் பதவி வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வேந்தராக இதுவரை கவர்னர் இருந்து வரும் நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்காக நிறைவவேற்றப்பட்ட மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் துணை வேந்தர், மற்ற பதிவாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் உருவாக்கப்பட்ட அதற்கான அதிகாரிகள் வரும் காலங்களில் நியமிக்கப்படுவார்கள் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

assembly

இது குறித்த தமிழக சட்டசபையின், சட்டத்துறை இந்த மசோதாக்களின் கோப்புகளை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கும். கவர்னர் இதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கவர்னர் மாளிகையில் 15க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், இப்போது வீட்டு வசதி மற்றும் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா ஆகிய 2 மசோக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

Spread the love
error: Content is protected !!