May 26, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

மாநிலங்களவைத் தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்தது.அதன்படி,தமிழ்நாட்டில் 6 இடங்கள் உட்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரை தேர்வு செய்ய ஜூன் 10 இல் தேர்தல் நடைபெறுகிறது.

இதனிடையே,தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ல் முடிவடைய உள்ள நிலையில்,தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன்,ராஜேஸ்குமார், நவநீதகிருஷ்ணன், எஸ்ஆர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஏ.விஜயகுமார் ஆகிய 6 எம்பிகளின் பதவிக்காலம் ஜூன் 29 இல் முடிவடைகிறது.

திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்..

2022 ஜூன் 10 அன்று நடைபெறவிருக்கும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், தி.மு.க. கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக

1. திரு. தஞ்சை சு. கல்யாணசுந்தரம் ;

2.திரு. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்.காம்., டி.சி.எம்;

3. திரு. இரா. கிரிராஜன், எம்.ஏ., பி.எல்., ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Announcement of the candidate contesting in the Rajya Sabha elections on behalf of the DMK - One seat allotted to the Congress party

Spread the love
error: Content is protected !!