இஸ்லாமியர்களுக்குரிய 12 மாதங்களில் 9 வது மாதமான ரமலான் மாதம் மிகவும் நன்மைக்குரியதாகும். இதில் இஸ்லாமிய மார்க்க வழிகாட்டி திருக்குர்ஆன். இந்த மாதத்தில் இறைவன் நோன்பு நோற்பதைக் கட்டாயமாக்கியுள்ளார். 14 மணி நேரம் பசித்திருந்து, விழித்திருந்து, ஒவ்வொருவரும் தன்னை புடம்போட்டு தூய்மைப்படுத்தி, அதன் மூலம் மனித சமுதாயத்துக்குப் பல்வேறு நன்மைகளை வழங்குகிறார்கள்.

இந்த நோன்பின் சிறப்புகள்:
* என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும். இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
* நோன்பு நோற்பவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
* சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு ‘அர்ரய்யான்’ என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழையமாட்டார்கள். ‘நோன்பாளிகள் எங்கே’ என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலில் நுழையமாட்டார்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
“இறைநம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுள்ளவராய்த் திகழக்கூடும்.” (குர்ஆன் 2:183) -ஆக நோன்பின் நோக்கம் இறையச்சம் எனும் பயிற்சியைப் பெறுவதுதான் என்பது உறுதியாகிறது. சரி, நோன்பு இறையச்சத்தை ஊட்டுகிறதா? நிச்சயமாக. ஒருவர் தொழுகிறார், தான தர்மம் செய்கிறார், ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதை எல்லாம் மிக எளிதாக வெளிப்படையாகவே தெரிந்துகொள்ளலாம். ஆனால் நோன்பு வைத்திருக்கும் ஒருவர் “நான் நோன்பாளி” என்று அவராகவே சொன்னால்தான் நமக்குத் தெரியும். நோன்பு என்பது இறைவனும் அடியானும் மட்டுமே அறிந்த ஒரு வழிபாடாகும்.
இச்சூழலில் சமூக நல்லிணக்கத்திற்கு அடையாளமாக பல இந்து சகோதர சகோதரிகள் இஸ்லாமியர்கள் நோற்கும் நோன்பை பேணும் நிலையில்…ஆம்பூர் உமராபாத் காவல் ஆய்வாளர் யுவராணி அவர்கள் சில தினங்களுக்கு முன்பே, தான் நோன்பு வைக்க விரும்புவதாக தமுமுகவினரிடம் தெரிவித்தார்…
இதையடுத்து இன்று அதிகாலை சஹர் உணவை உண்டு இஸ்லாமியர்கள் வைப்பது போலவே முழு நோன்பை நோற்று தமுமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிஷா மஸ்ஜித் நிர்வாகிகளோடு இணைந்து இஃப்தார் செய்து நோன்பு திறந்தார்…

Related Posts
காசிக்கு சமமான ஸ்தலம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்!
இன்றைய பஞ்சாங்கம் & ராசி பலன்!
மகிமைகள் தரும் மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்-!