May 30, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

நாளைய ராசிபலன்🔥 (30.04.2022)

நாளை என்ன நடக்கும் என்று அறியும் சக்தி பொதுவாக மனிதர்களுக்கு இருப்பது அசாத்தியமான ஒன்றாகும். ஆனால் வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நமது ஸ்பைடமேன் தமிழ் குழும நணபர்கள் மூலம் நாளைய தினத்தின் பலனை நாம் அறியும் சாத்தியம் உள்ளது. ஒரு நாள் முன்கூட்டி திட்டமிடுவதன் மூலம் நம்மால் ஓராயிரம் பிரச்சினைகளை சமாளிக்க இயலும். அங்ஙனம் நமது நாளைய தினத்தின் சுப பலனை இன்றே அறிவதன் மூலம் நம்முள் கரை புரண்டு ஓடும் உற்சாகம் நமக்கு ஆயிரம் யானை பலமளிக்கும். நாளைய தினத்தின் சுப அசுப பலனை அறிந்து அதற்கேற்ப திட்டமிட பொதுவான நாளைய ராசி பலனைக் காணுங்கள். நாளைய தினம் இனிமையான நாளாக இருக்க ஸ்பைடர்மேன் தமிழ் டாட் காம்- மின்  நல்வாழ்த்துக்கள்!

🐐 Aries-மேஷம் 🐐

ஏப்ரல் 30, 2022

கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப மாற்றமான சூழ்நிலைகள் அமையும். திருப்திகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.

பரணி : ஒத்துழைப்பான நாள்.

கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
—————————————

🐂 Taurus-ரிஷபம் 🐂

ஏப்ரல் 30, 2022

உத்தியோக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.

ரோகிணி : வரவு கிடைக்கும்.

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
—————————————

👫Gemini-மிதுனம்👫

ஏப்ரல் 30, 2022

உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் அனுகூலமான சூழல் ஏற்படும். மனதிற்கு விரும்பிய புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். நன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

திருவாதிரை : அனுகூலமான நாள்.

புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
—————————————

🦀 Cancer-கடகம்🦀

ஏப்ரல் 30, 2022

உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வாகனம் தொடர்பான பயணங்களில் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். ஆதாயகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

புனர்பூசம் : சாதகமான நாள்.

பூசம் : லாபம் கிடைக்கும்.

ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.
—————————————

🦁 Leo-சிம்மம் 🦁

ஏப்ரல் 30, 2022

குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப விரயங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்தத்தன்மை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதால் லாபம் உண்டாகும். இன்னல்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : தடைகள் அகலும்.

பூரம் : அனுகூலமான நாள்.

உத்திரம் : லாபம் கிடைக்கும்.
—————————————

🧝‍♀ Virgo-கன்னி 🧝‍♀

ஏப்ரல் 30, 2022

பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பாகப்பிரிவினைகளில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது சற்று கவனத்துடன் செயல்படவும். உணவு சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முயற்சிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
—————————————

⚖ Libra-துலாம் ⚖

ஏப்ரல் 30, 2022

எந்தவொரு காரியத்தையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். கவலைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : சுறுசுறுப்பான நாள்.

சுவாதி : லாபம் மேம்படும்.

விசாகம் : மேன்மையான நாள்.
—————————————

🦂 Scorpio-விருச்சிகம் 🦂

ஏப்ரல் 30, 2022

முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களை புரிந்து கொள்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : நன்மை ஏற்படும்.

அனுஷம் : தேவைகள் நிறைவேறும்.

கேட்டை : புரிதல் உண்டாகும்.
—————————————

🏹 Sagittarius-தனுசு 🏹

ஏப்ரல் 30, 2022

உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். பிள்ளைகளுக்கான சுபகாரியங்கள் கைகூடும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

பூராடம் : ஈடுபாடு உண்டாகும்.

உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.
—————————————

🐏 Capricorn-மகரம் 🐏

ஏப்ரல் 30, 2022

குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவியின் மூலம் தேவைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : தேவைகள் நிறைவேறும்.

திருவோணம் : அனுசரித்து செல்லவும்.

அவிட்டம் : முன்னேற்றம் அதிகரிக்கும்.
—————————————

👃 Aquarius-கும்பம் 👃

ஏப்ரல் 30, 2022

தொழில் தொடர்பான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் கைகூடும். கடினமான செயல்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.

சதயம் : போட்டிகள் குறையும்.

பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
—————————————

🐠 Pisces-மீனம் 🐠

ஏப்ரல் 30, 2022

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபார பணியில் புதிய அறிமுகம் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். பொறுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : துரிதம் உண்டாகும்.

உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.

ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

Spread the love
error: Content is protected !!