இந்தியாவில் அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் முதல் மாநாடு 1953ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதுவரை 38 மாநாடுகள் நடைபெற்றுள்ள நிலையில், கடந்த 2016ம் ஆண்டில் கடைசி மாநாடு நடைபெற்றது. 6 ஆண்டுகளுக்கு பிறகு ‘உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாநாடு-2022’ இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்க உள்ளனர்.
இம்மாநாட்டில், நீதித்துறையில் உள்ள பிரச்னைகள், 2016ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம், நீதியை விரைவாக வழங்குதல், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்பாடு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கூடுதல் கவனம் செலுத்துதல், தேசிய நீதித்துறை, மாவட்ட நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

நாளை 30ம் தேதி டெல்லி விக்யான் பவனில் நடைபெற உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநில தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார். பல மாநிலங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளைகள் அமைப்பது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா உட்பட பலரின் கோரிக்கையாக உள்ள சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உச்சநீதிமன்றங்களின் கிளைகளை அமைப்பது தொடர்பான ஆலோசனையும் நீதிபதிகள் மாநாட்டில் முதன்மை வகிக்கும் என தெரிகிறது.

Related Posts
ஏஐ உலகை வியக்க வைத்த பாரத மண்டபம்: இந்தியா ஏஐ தாக்கம் உச்சிமாநாடு!
ஏ ஐ துறையில் உலக குருவாகும் இந்தியா: டெல்லி உச்சிமாநாட்டின் சிறப்பம்சங்கள்.
இந்தியா & AI: 2035-க்குள் $607 பில்லியன் பொருளாதார இலக்கு