May 26, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

இன்றைய பஞ்சாங்கம் & ராசி பலன்!

சுபகிருது ஆண்டு

சித்திரை 23 –

1,நாள் :வெள்ளிக்கிழமை (06.05.2022)
2,நட்சத்திரம் : திருவாதிரை 09:20 AM வரை பிறகு புனர்பூசம்
3,திதி : 12:33 PM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
4,யோகம் : சித்த யோகம்
5,கரணம் : பாலவம் காலை 10:55 வரை பின்பு கௌலவம்

நல்லநேரம் : காலை 9.30 – 10.30 / 4.30 – 5.30

வெள்ளிக்கிழமை

சுபஹோரை விவரங்கள்
காலை 6 முதல் 9 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 5 முதல் 6 வரை, இரவு 8 முதல் 9 வரை, 10.30 முதல் 11 வரை

சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்

இன்று: சுபமுகூர்த்த நாள்

நல்ல நேரம்
09:30 – 10:30 கா / AM
04:30 – 05:30 மா / PM

கௌரி நல்ல நேரம்
12:30 – 01:30 கா / AM
06:30 – 07:30 மா / PM

இராகு காலம்
10.30 – 12.00

எமகண்டம்
03.00 – 04.30

குளிகை
07.30 – 09.00

சூலம்: மேற்கு
பரிகாரம்-வெல்லம்

சந்திராஷ்டமம்
கேட்டை

மேல் நோக்கு நாள்
லக்னம்:மேஷ லக்னம் இருப்பு
நாழிகை 01 வினாடி 14

சூரிய_உதயம்
Sun Rise 05:55 காலை / AM

இன்றைய_ராசிபலன்

💐மேஷம்
மேஷம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து
கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

💐ரிஷபம்
ரிஷபம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

💐மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

💐கடகம்
கடகம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து செல்லும். உறவினர் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

💐சிம்மம்
சிம்மம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர் களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.

💐கன்னி
கன்னி: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கை குறித்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சி பலிதமாகும் நாள்.

💐துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் சூடு பிடிக் கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தெய்வ அணுகூலம் உண்டாகும் நாள்.

💐விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்‌. வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

💐தனுசு
தனுசு: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். மகிழ்ச்சியான நாள்.

💐மகரம்
மகரம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.

💐கும்பம்
கும்பம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

💐மீனம்
மீனம்: நண்பர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப் போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Spread the love
error: Content is protected !!