May 30, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

இன்றைய பஞ்சாங்கம் & ராசிபலன்!

சுபகிருது ஆண்டு

சித்திரை 22 –

1,நாள் :வியாழக்கிழமை (05.05.2022)
2,நட்சத்திரம் : மிருகசீரிடம் 06:16 AM வரை பிறகு திருவாதிரை
3,திதி : 10:01 AM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி
4,யோகம் : மரண யோகம்
5,கரணம் : பவம்

நல்லநேரம் : காலை / மாலை : 10.30 – 11.30

வியாழக்கிழமை

சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)

சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

நல்ல நேரம்
10:30 – 11:30 கா / AM
00:00 – 00:00 மா / PM

கௌரி நல்ல நேரம்
12:30 – 01:30 கா / AM
06:30 – 07:30 மா / PM

இராகு காலம்
01.30 – 03.00

எமகண்டம்
06.00 – 07.30

குளிகை
09.00 – 10.30

சூலம் :தெற்கு
பரிகாரம்-தைலம்

சந்திராஷ்டமம்
அனுஷம்

மேல் நோக்கு நாள்

லக்னம்: மேஷ லக்னம் இருப்பு நாழிகை 01 வினாடி 22

சூரிய_உதயம்
Sun Rise 05:55 காலை / AM

இன்றைய_பஞ்சாங்கம்

💐மேஷம்
மேஷ ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

💐ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்து நீக்கவும். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தம் நீங்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

💐மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

💐கடகம்
கடக ராசி நேயர்களே, ஆடம்பரச் செலவுகளால் பண விரையம் ஏற்படும். நட்பால் நன்மை வந்து சேரும். பிரியமானவர்கள் வழியில் மனசங்கடங்கள் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை இருக்கும்.

💐சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, குல தெய்வ வழிபாடு நல்ல விதமாக அமையும். நல்ல தகவல் ஒன்று காதில் வந்து விழும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

💐கன்னி
கன்னி ராசி நேயர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். வாழ்க்கையில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

💐துலாம்
துலாம் ராசி நேயர்களே, எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். பெற்றோரின் அரவணைப்பு கிட்டும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

💐விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். மனதில் உருவான இனம்புரியாத பயம் நீங்கும். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் புதிய முயற்ச்சிகள் எதையும் தொடங்க வேண்டாம்

💐தனுசு
தனுசு ராசி நேயர்களே, குடும்ப எதிர்ப்புகளை எதிர்கொள்ள முடியும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

💐மகரம்
மகர ராசி நேயர்களே, தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

💐கும்பம்
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவு வந்துப் போகும். முக்கிய காரியங்களை போராடி முடிக்க வேண்டிவரும். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

💐மீனம்
மீன ராசி நேயர்களே, அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Spread the love
error: Content is protected !!