May 30, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

மசாஜ் பார்லர்களை சோதனை செய்ய உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் – ஐகோர்ட் அறிவிப்பு

சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய ஸ்பா என்றழைக்கப்பட்ட தனியார் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடத்தி, மசாஜ் நிலையம் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து, உரிமையாளர்கள் தொடுத்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த தடையை நீக்கக்கோரி காவல்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையின்போது, சுதந்திரமாக தொழில் நடத்தும் உரிமையில் போலீஸ் தலையிட முடியாது என்றும் விபச்சார தடுப்பு அதிகாரிக்கு தான் சோதனை நடத்த உரிமை உள்ளது என்றும் மசாஜ் நிலைய உரிமையாளர்கள் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை தரப்பு கூறுகையில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும்போது, காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என தெரிவித்தது.

இதையடுத்து, மசாஜ் நிலையங்களில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தால் சோதனை மேற்கொள்ள உள்ளூர் போலீசாருக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ள நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தெரிவித்தார்.

Spread the love
error: Content is protected !!