May 26, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

கிளம்பிட்டாருய்யா.. பிரதமர் மறுபடியும் ஃபாரின் ட்ரிப் கிளம்பிட்டார்!

ந்திய பிரதமர் மோடி இந்தாண்டின் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை நாளை – அதாவது மே 2ஆம் தேதி தொடங்குகிறார். இம்முறை மோடி ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இந்த பயணத்தில் 65 மணிநேரம் அலுவல் பணி மேற்கொள்ளும் பிரதமர், 25 சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார். இந்த சந்திப்பில், ஏழு நாடுகளைச் சேர்ந்த எட்டு உலக தலைவர்கள், 50 சர்வதேச தொழிலதிபர்கள் மற்றும் அந்நாட்டில் உள்ள இந்தியர்களை சந்திக்கவுள்ளார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் குழப்பம் நிலவும் சூழலில் பிரதமர் மோடியின் இந்த ஐரோப்பா பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் ஒரு நாள் தங்கும் பிரதமர் இரு இரவுகளை விமான பயணத்தில் கழிக்கவுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்லும் பிரதமர் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்திக்கவுள்ளார். அன்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மேக்ரான் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் அந்நாட்டின் அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்திக்கவுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஜெர்மனியின் அதிபராக இருந்த ஏஞ்சலா மெர்கலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் ஸ்கோல்ஸ் புதிய அதிபராக பொறுப்பேற்றார். ஸ்கோல்ஸ் அதிபராக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

பின்னர் டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகன் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மேட்டே பிரிடெரிக்சென்னை சந்தித்து பேசுகிறார். இந்த டென்மார்க் பயணத்தின் போது 2ஆவது இந்தியா-நர்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்று உரையாற்றவுள்ளார். இந்த நார்டிக் உச்சி மாநாட்டில் டென்மார்க்குடன் சேர்த்து ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நார்டிக் நாட்டின் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த உச்ச மாநாட்டில் பொருளாதாரம், காலநிலை மாற்றம், தொழில்நுட்பம், மாற்று எரிசக்தி,சர்வதேச பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன

Spread the love
error: Content is protected !!