க்ரைம் நடந்து பல வருடங்கள் ஆகி கைவிடப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் ஒரு டிபார்ட்மெண்ட் தான் Department Q படமாக இருந்தாலும், புத்தமாக இருந்தாலும் பொதுவாக குற்றம் நடந்தவுடன் அதை விசாரிக்கும் கதைகள் தான் உலகம் முழுக்க பிரபலம். அதற்கு நேர் எதிராக, விசாரணை செய்து, கைவிடப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் இந்தக்கதையின் மையம் தான் இதில் சிறப்பே! டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற க்ரைம் நாவலசிரியர் Jussi Adler-Olsen எழுதிய தொடர் நாவல்கள் தான் Department Q . இதில் வந்த முதல் புத்தகம் The Keeper of Lost Causes (Kvinden i buret – 2007) இந்தப்புத்தகம் டென்மார்க் எங்கும் அதிரிபுதிரி ஹிட்டடிக்க தொடர்ச்சியாக 10 புத்தகங்கள் இதுவரை வந்துள்ளன. இந்த முதல் புத்தகம் தான் பிரிட்டிஷுக்கு ஏற்றவாறு, மாற்றப்படடு, இப்போது நெட்பிளிக்ஸ் சீரிஸாக வந்துள்ளது.
ott,
டென்மார்க்கில் இந்த புத்தகங்களை வைத்து, இதுவரை 6 படங்கள் வந்துள்ளது.
1. The Keeper of Lost Causes (2013
2. The Absent One (2014)
3. A Conspiracy of Faith (2016)
4. The Purity of Vengeance (2018)
5. The Marco Effect (2021)
6. Boundless (2024)
க்ரைம் பட ரசிகர்கள், கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய படங்கள் இவை.
டென்மார்க்கோட அந்த இயற்கையின் பின்னணியில், Nordic Noir பாணியில் மிக மெதுவாக, அழுத்தமாக நகரும் இப்படங்கள் உண்மையிலேயே ஒரு புது அனுபவமாக இருக்கும். கார்ல் ஒரு நல்ல இன்வெஸ்டிகேட்டர், தன்னோட பார்ட்னரோட ஒரு கொலை நடந்த இடத்த விசாரிக்க போகும்போது…, அங்க மறைஞ்சு இருந்த குற்றவாளி, அவங்க ரெண்டு பேரையும் சுட்டுட்டு போயிடறான். அதுல பார்ட்னர் இறந்து போக, இவர் மட்டும் உயிர் பிழைச்சிக்குறாரு.. !பல மாசம் கழிச்சு அவர் வேலைக்கு வரும் போது, அவர் கூட யாருமே பார்ட்னரா வரத் தயாரா இல்லை. அவருக்கு கேஸ் கூட அசைன் பண்ண மறுக்குறாங்க.. !அந்த நேரத்துல அரசுக்கு கைவிடப்பட்ட வழக்குகள் மீது அழுத்தம் வர, பேருக்கு ஒரு புது டிபார்ட்மெண்ட் உருவாக்குறாங்க… அதுதான் Department Q.
இப்ப நம்ம ஹீரோ கார்லுக்கு உதவியா ஆஸாத்னு ஒரு ஆர்வகோளாறு கான்ஸ்டபிள் மட்டும் கொடுத்து, ஒரு அண்டர்கிரவுண்ட் ஸ்டாக் ரூம தர்றாங்க.. குப்பை ரூம், ரெண்டு டேபிள், ஒரு கம்ப்யூட்டர், குமிஞ்சு கிடக்கிற வழக்குகள். அதுல இருந்து, நாலு வருசம் முன்னாடி காணாம போன ஒரு பொலிடிசியன், தற்கொலை பண்ணிகிட்டதா சொல்லி முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்க தேர்ந்தெடுக்கிறாங்க… பாடி இப்ப வர கிடைக்கல, ஆனா அவங்க உயிரோட ஒரு இடத்துல அடைச்சி வைக்கப்பட்டு இருக்காங்க… அத எப்படி கண்டுப்பிடிகிறாங்க.. அதான் முதல் புத்தக / படத்தோட கதை.
இது நார்மலான க்ரைம் திரில்லர் மாதிரி இருக்காது. இதுல வர்ற கேர்கடர்ஸ், அது எழுதப்பட்ட விதம், இரண்டு போலீஸ் அதிகாரிக்களுக்கு இடையே உள்ள உறவு எழுதப்பட்ட விதம், ஆஸாத் கேரக்டரோட டெவலப்மெண்ட் என… Nordic Noir பாணியில் ஒவ்வொரு படமும் அவ்வளவு ஆழமா இருக்கும், இது ஒரு அட்டகாசமான க்ரைம் சீரிஸ். மூலத்துல ஹீரோ கேரக்டர் டிப்ரஸன்ல பேசவே பேசாது. ஆனா விசாரணையப்ப கேக்குற கேள்விகள், நெத்தியடியா இருக்கும். ஆனா பிரிட்டிஷ் வெர்ஷன் என்னப் பொறுத்த வரை நிறைய கமர்ஷியல் படுத்தியிருக்காங்க.. கேரக்டர்ஸோட இயல்பையே மாத்தி எழுதியிருக்காங்க…
தொடர்ந்து எடுக்க போறாதால.. கேர்கடர்களுக்கு நிறைய பின்னணி எழுதியிருக்காங்க…
இந்த வெர்ஷனும் நல்லாவே இருக்கு.
ஒரு முக்கியமான, அழுத்தமான அட்டகாசமான சீரிஸ் மிஸ் பண்ணாதீங்க..
நார்வே படங்களையும் மிஸ் பண்ணாதீங்க.. ❤️

Related Posts
💥தி ஃபேமிலி மேன் சீசன் 3: விமர்சனம் =அசலான ஸ்பை ஹீரோ – ஸ்ரீகாந்த் திவாரி!
💥’சிசு 2′ (Sisu 2): லாஜிக்கை தூக்கியெறிந்து வெறித்தனமான ஆக்ஷன் விருந்து!
🎬 ‘No Other Choice’ – மாஸ்டர் பில்டர் Park Chan-wook-இன் அதிர்ச்சியளிக்கும் பிளாக் காமெடி த்ரில்லர்!