மே தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.-2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.-3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.-3 (ஏ), எப்.எல்.-3 (ஏ.ஏ.) மற்றும் எப்.எல்.-11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தவறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந் நிலையில், ‘குடி’மகன்கள் இன்றைக்கு மது அருந்துவதற்காக, நேற்று கூடுதலாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். எனவே, டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியதால், மது விற்பனை களைகட்டியது.

அந்த வகையில் இன்று விடுமுறை என்பதால், டாஸ்மாக் மதுபான கடைகளில் நேற்று விற்பனை படுஜோராக இருந்தது. நேற்று ஒரு நாள் மட்டும் ₹252.34 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது.
சென்னையை பொருத்தவரை நேற்று மட்டும் ₹52.28 கோடிக்கும், திருச்சியில் ₹49.78 கோடிக்கும், சேலத்தில் ₹ 48.67 கோடிக்கும், மதுரையில் ₹54.89 கோடிக்கும், கோவையில் ₹46.72 கோடிக்கும் மொத்தம் ₹252.34 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

Related Posts
🔬தமிழ்நாட்டில் ரூ.250 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் மற்றும் VLSI மையம்: AI எதிர்காலத்திற்கான அடித்தளம்!
“தமிழ்நாட்டில் AI வளர்ச்சி வேகத்தில் பின்தங்கியிருக்கிறதா?”- ஓர் அலசல்!
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த புரிதல் மற்றும் வளர்ச்சி!