September 12, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். -கு.பாரதி,தலைவர் ,தென்னிந்திய மீனவர் நலச்சங்கம்,

தமிழகத்தில் மீன் பிடித்து வாழ்க்கை ஓட்டுவோர் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ,தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 14 மாவட்டங்களில் உள்ளனர். அதில் பதிவு செய்யப்பட்ட சுமார் 5,925 மீன்பிடி விசைப் படகுகளும்,பதிவு செய்யப்படாத சுமார் 2,000 மீன்பிடி விசைப்படகுகள் உள்ளது.

இதில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 2001ஆம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரை கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல், மே 29 வரையிலும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 29 வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஆக அமல் படுத்தப்பட்டு வந்தது.

2017 ஆம் ஆண்டு முதல், கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஆக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மீன்பிடித் தடைக்கால நிவாரணம் கடந்த 24.05.2011 முதல் தடைக்கால நிவாரணமாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வந்தது. 2017 ஆம் ஆண்டு முதல் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதை 10 ஆயிரமாக உயர்த்தி தர கோரிக்கைக் குரல் எழுந்துள்ளது

இந்த மீன்பிடி தடை காலத்தில் விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை மீன்பிடி வலைகளை மீன்பிடித் தொழிலுக்கு தேவையான உபகரணங்களை பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபடுவார்கள். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் விசைப்படகு தொழிலாளர்கள் இந்த இரண்டு மாத காலம் சொந்த ஊருக்குச் சென்று ஓய்வு எடுத்து விட்டு மீன்பிடித். தொழிலில் ஈடுபடுவார்கள். இதுபற்றி கு.பாரதி,தலைவர் ,தென்னிந்திய மீனவர் நலச்சங்கம் அவர்களிடம் கேட்டபோது மீன்கள் இனப்பெருக்க காலமான மீன்பிடி தடைக்காலத்தை உரிய வகையில் ஆய்வு செய்து பருவமழை காலமான அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஆகிய மாதங்களில் அமல்படுத்த வேண்டும். கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டு கழிவுகளை கடலில் கலக்க விடும் நச்சு ஆலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்,கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்,இறால் குஞ்சு போறிப்பகங்கள், இரசாயன தொழில் நிறுவனங்கள் இந்த தடைக்காலத்தில் கழிவுகளை கடலில் கலக்க விடாமல்
தடுக்க வேண்டும். மேலும் இக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவ தோடு படகுகள் மற்றும் எஞ்ஜின், வலைகளை ரிப்பேர் செய்வதற்கான செலவு களும் அதிகரித்து உள்ளன. வருமானம் இல் லாத நிலையில் மீனவ குடும் பங்கள் பசி பட்டினி யால் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத் து-க்கு பதிலாக ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும்” என்றார்

Spread the love
error: Content is protected !!