May 26, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

The Beauty Inside 2015 – கொரிய மொழிப் படம்!

ரே தீம்ல நிறைய படம் வரும். ஆனா திரைக்கதை முழுசா வேறா இருக்கும். உலகம் முழுக்க இது பிரபலமானது தான். ஒரே கதைக்கரு வேற வேற திரைக்கதை.

தமிழ்ல கூட அந்த மாதிரி நிறைய இருக்கு.-ஷங்கரோட பாய்ஸ் &செல்வராகவனோட துள்ளுவதோ இளமை=ரெண்டும் ஒரே தீம் தான்.

தில்லானா மோகனாம்பாள் எடுத்துக்கலாம்: கரகாட்டக்காரன், சங்கமம் ரெண்டும் இதோட தழுவல் தான் ஆனா திரைக்கதை வேற வேற. இந்த மாதிரி இன்னும் எக்கசக்கமா சொல்லிட்டே போகலாம். திரைக்கதையை கவனிக்கறவங்களுக்கு இந்த மாதிரி படங்கள்ல நிறைய பாடம் இருக்கும்.

ஜப்பான்ல எழுதின ஒரு சிறுகதை, அத தழுவி அங்க படமா வர, அது சைனா, கொரியா, அமெரிக்கானு சுத்த, இங்க அதப்பார்த்து காப்பியடிச்ச த்ரிஷ்யம், பாபநாசம்னு ஆரம்பிச்சு வேற லெவல்ல ரவுண்ட் அடிச்சது.

ஒரே தீம எப்படி அணுகலாம்கிறதுக்கு பாடம் இதில ஒளிஞ்சிட்டிருக்கு

Everyday – 2018

2012 ல் இதே பெயர்ல எழுதப்பட்ட ஒரு நாவல அடிப்படையா வச்சு வந்த படம்

ஒரு 16 வயசு பையன் தினமும் வேற வேற மனிதர்களோட உடம்புல எழுந்திருக்கிறான். தன்னோட காதலன் உடம்புல வர்ற அவன, ஒரு பொண்ணு காதலிக்க ஆரம்பிக்குது. இதுக்கப்புறம் என்ன நடக்குதுங்கறது தான் படம். ரொமான்ஸ் டிராமா பிடிக்கும்னா கண்டிப்பா பார்க்கலாம். அட்டகாசமான படம் .

விஷயம் அதில்ல…

The Beauty Inside 2015

கொரிய மொழில வந்த படம்

கதை – ஒவ்வொரு நாளும் வேற வேற உடலோட எந்திருக்கிற ஒருத்தன், தன்னோட அடையாளத்த மறைச்சுகிட்டு ரகசிய வாழ்க்கை வாழுறான். அவன் ஒரு பொண்ண சந்திக்கிறான். அவள காதலிக்கிறான். அதுக்கப்புறம் என்னங்கிறது தான் கதை. இதுவுமே மெதுவா நகர்ற அழகான காதல் கதை. அட்டகாசமான படம்.

இப்பத்தான் விஷயமே-இந்த கொரியன் படம் அமெரிக்காவுல the beauty inside பெயரில் 2012 ல் வெளியான ஒரு டெலி சீரிஸ்ல இன்ஸ்பையர் ஆகி எடுத்த படம். அதோட கதை வேற. அது சோஷியல் இண்ட்டராக்‌ஷன் முறையில வெளியான ஒரு சீரிஸ்.

இப்ப இந்த கொரியன் படத்த அடிப்படையா வச்சு முழுக்க வேறொரு கதைல The Beauty Inside 2018 ஒரு கொரியன் சீரிஸ் வந்திருக்கு.

தலை சுத்துதுல

இதோட கதை முழுக்க வேற, தேடி படிச்சுக்கங்க…

இதில் எல்லாத்துலையும் , கதைக்கரு ஒன்னுதான். ஆனா திரைக்கதை வேற வேற. எல்லாமே சுவாரஸ்யம் குறையாதது கூட .

கதிரவன்

Spread the love
error: Content is protected !!