September 17, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

உயர்நீதிமன்றத்திற்கு இன்று முதல் கோடை விடுமுறை!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விடுமுறை காலங்களில் அவசர வழக்குகளை விசாரிக்கவும், வழக்கமான நடைமுறைகளை கவனிக்கவும் விடுமுறை கால நீதிபதிகள் நியமிக்கப்படுவர்.

நடப்பாண்டை பொறுத்தவரை கோடைகாலவிடுமுறை இன்று முதல் உயர்நீதிமன்ற விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விவரங்களையும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. இதே போல் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மே மாதத்தின் முதல் வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமை மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும் அவை புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் 21 நீதிபதிகளும், மதுரை கிளையில் 15 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
error: Content is protected !!