October 14, 2025

Namma Multimedia

The gold mine of tomorrow's world

Ronth 2025- ரோந்து (Malayalam) !

நாம பல நேரம், சாதாரணமா இவங்களுக்கு என்னப்பா, இந்த வேலைல.. வாழ்க்கை ஜாலியா போகும் அப்படினு நினைக்கிற பல வேலைகளுக்கு பின்னால, இருக்கிற கஷ்டம், மன அழுத்தம், படு பயங்கரமா இருக்கும். சென்னை வந்த புதுசுல, ஆபிஸ் வேலையா வெளில போனப்ப, பர்ஸ தொலைச்சிட்டேன். திடீர்னு நாலு நாள் கழிச்சு, ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து ஒரு போன், என் பேரு, போன் நம்பர் எல்லாம் கேட்டுட்டு, பர்ஸ் திருடன் பிடிபட்டுருக்கான் பர்ஸ் வந்து வாங்கிக்கங்கனு சொன்னாங்க… ~சரினு போனா…. இன்ஸ்பெக்டர் வெளில போயிருக்காருனு 1 மணி நேரம் உக்கார வச்சாங்க.. போலீஸ் ஸ்டேஷனோட நடைமுறைகளே வித்தியாசமா இருந்தது. இன்ஸ் நாலு ஆளுங்கள பிடிச்சிட்டு வந்தாரு.., அவங்கள உள்ள ஜெயில்ல உட்கார வச்சு பிராஸஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.., அரை மணி நேரம் கழிச்சு தான் என்ன கூப்பிட்டாரு… என் வரலாறையே தோண்டி கேட்டுட்டு, பர்ஸ குடுத்து அனுப்பிட்டாங்க… !ஒரு பர்ஸ கொடுக்க எதுக்குடா இவ்ளோ நேரம் ஆகுதுனு தோணுச்சு.. ஆனா நிவின் பாலி நடிப்புல, ஆக்சன் ஹீரோ பிஜுனு ஒரு படம் வந்தது, அப்ப புரிஞ்சுது, ஒரு போலீஸ் ஸ்டேஷன் அவ்வளவு சாதாரணம் இல்ல.. அதுக்கு பின்னாடி இருக்கிற வேலைகள், அழுத்தம் எல்லாம் நம்மள கதற விட்டுறும்.

சமீபத்துல ஜாக்கி சேகர் அண்ணா சொல்லி Designated Survivor சீரிஸ் பார்த்தேன், அதுல மொத்த பாராளுமன்றமும் அழிஞ்சு போக, 10 வது இடத்தில Designated Survivor ஆ இருக்க ஒரு ஆள, பிரஸிடெண்ட் ஆக்குவாங்க…. அவர் எப்படி ஆட்சி பண்றாருங்கறது தான் கதை. பயங்கர டீடெயிலா இருக்கும். பேருக்கு தான் அமெரிக்க பிரஸிடெண்ட், ஆனா ஒன்னுக்கு போக நேரம் இருக்காது..!இந்த மாதிரியான களம் தான் இந்தப்படமும். இயக்குநர் Shahi Kabir வித்தியாசமான ஆளு.Ela Veezha Poonchira டைரக்ட் பண்ணவர். அந்தப்படமும் அற்புதமா இருக்கும்.

nayatu, Joseph, Officer on duty படங்களோட திரைக்கதையும் எழுதினவரு… ஒரு அனுபவம் வாய்ந்த நேர்மையான போலீஸ் அதிகாரி, ஸ்டேஷன்ல யாரு கூடயும் ஒத்துப்போகாத ஆளு, அவர் கூட புதுசா வேலைக்கு வந்த இளைஞன். இரண்டு பேரும் ஒரு ராத்திரி பட்ரோல் ரோந்து டூட்டிக்கு போறாங்க.. அந்த ராத்திரில என்னென்ன நடக்குதுன்றது தான் படம். ஆக்சன் ஹீரோ பிஜு பகல்னா இது இரவு அவ்வளவு தான் அந்த ஃபார்மேட் தான் அப்படி நினைக்கும் போது…,திரைக் கதையில மாயஜாலமே பண்ணிருக்காங்க..!

ஒரு சின்ன கேஸ கடைசியில கொண்டு வந்து முடிச்ச இடம் எல்லோருக்குமே அதிர்ச்சியா இருக்கும். அப்புறம் இன்னொன்னு இருக்கு.. ஒரு சிஸ்டம் இருக்குனா அதுல நேர்மையா இருக்கவனும் அப்பாவியும் தான் முதல் பலி… இது மாறவே மாறாது.. அது இதுல அழுத்தமா பதிஞ்சிருக்கு…

இனி ஸ்பாய்லர் …..

பல படங்கள் பல நேரங்கள்ல முடிஞ்ச பிறகும் ஓடுற மாதிரியே எனக்குத் தோணும்… இதுலயும் அப்படி தான். இந்தப்படத்தில வாண்டட இழுத்து விசாரணை படம் மாதிரி ஒரு க்ளைமாக்ஸ் வச்சிருக்காங்க.. !டூட்டி முடிச்சு அவங்க ரெண்டு பேரும் ஸ்டேஷன் போகும் போதே படம் முடிஞ்சுடுது… அதுக்கப்புறம் இழுத்ததா தோணுது..! அப்படி முடிஞ்சிருந்தா அழகான ஃபீல் குட் படமா இருந்திருக்கும்… படத்தோட மையமும் அது தான்.

இப்ப Stolen படம் பேச வந்த கதைக்களம் வேற.. அந்தப்படம் அந்த கிராமத்துல மொத்தப்பேரும் கூடித் தொறத்தும் போது முடிஞ்சிருக்கலாம்னு தோணுச்சு.. படம் தெறியா பேச வந்த விசயத்தா சரியா சொன்னதா இருந்திருக்கும். ஆனா அதோட க்ளைமாக்ஸும் ஓகே தான். அதே மாதிரி இதோட க்ளைமாக்ஸும் தேவை தான். அது தர்ற மன அழுத்தம் தான் தாஙக் முடில … 😭😭

ரொம்ப ரொம்ப முக்கியமான படம் Don’t Miss It

கதிரவன்

Spread the love
error: Content is protected !!