October 19, 2025

Namma Multimedia

The gold mine of tomorrow's world

அமைதிப்படையில் சிறப்பாக பணியாற்றிய இந்திய வீரர்களுக்கு ஐ.நா., விருது!

ஐ.நா., சார்பில் தெற்கு சூடானில் அமைதி பணியில் ஈடுபட்ட 1,100க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்கு ஐக்கிய நாடுகள் விருது வழங்கப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்ததற்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இது குறித்து ஐ.நா., வெளியிட்ட அறிக்கையில் தெற்கு சூடானுக்கான ஐ.நா., இயக்கத்தில், அமைதி பணியாளர்கள் பொது மக்களின் உயிரை மட்டும் காக்கவில்லை. 1,160 இந்திய வீரர்கள், தெற்கு சூடானில் சாலைகளை கட்டமைத்ததுடன், உள்ளூர் சமுதாய மக்கள் இடையே பிணைப்பை ஏற்படுத்தினர். மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதற்காக அவர்கள் ஐ.நா., விருது பெற தகுதி பெற்றவர்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற வீரர்கள் அனைவரும் அப்பர் நைல் ஸ்டேட்டில் பணிபுரிந்து வருகின்றனர். அந்நாட்டில், மலகல் முதல் அப்வங் வரையிலும் மற்றும் பல வழிகளில் இந்திய பொறியாளர் பிரிவினர் சாலை அமைத்து தந்துள்ளனர்.

விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க மொபைல் கிளினிக்குகளை அமைத்து, பசு, ஆடு, கழுதை உள்ளிட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த தகவல், ஐ.நா.,வின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது

Spread the love
error: Content is protected !!