May 26, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

“Murder Mindfully” – ஜெர்மன்., Netflix!

நெட்பிளிக்ஸ்ல இங்க்லீஷ் இல்லாம, வெளியான மொத ரெண்டு வாரத்தில டாப்ல இருந்த சீரிஸ்.

டார்க் பிளாக் காமெடி, பக்கா எண்டர்டெயின்மெண்ட். ரொம்ப சின்ன விசயம் தான் நம்ம மனசு எப்பவும் அலைபாய்ஞ்சுட்டே இருக்கும், நம்ம ஒரு இடத்தில ஒரு வேலை பார்த்துகிட்டு இருப்போம், ஆனா நம்ம மைண்ட் வேற எங்கேயோ இருக்கும். இது நம்ம எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை தானே..?ஆனா நம்ம எங்க, எந்த இடத்தில, என்ன வேலை பார்த்துட்டு இருக்கோமோ, அது மேல ஃபுல் போகஸ் பண்ணினா எப்படி இருக்கும்.. ?

இந்த சீரிஸ்ல ஹீரோ ஒரு லாயர், அண்டர்கிரவுண்ட் தாதாக்களோட பிரச்சனைகளுக்கு ஆஜாரவாரு.. அவர் ஆபீஸ்ல அவர அதுக்காகவே ஒதுக்கி விட்டுருக்காங்க…!வீட்டில் குழந்தையோட இருக்க நேரம் இருக்காது, பொண்டாட்டி கூட சண்டை, ஆபீஸ்லயும் டார்ச்சர், திரும்பின பக்கமெல்லான் கன்னி வெடி மாதிரி பிரச்சனை…!சைக்காட்றிஸ்ட் கிட்ட போறாரு…அவரு தான் அந்த தாரக மந்திரத்த சொல்லித் தர்றாரு, முதல்ல உனக்கு என்ன முக்கியம்னு முடிவு பண்ணு, நீ இருக்க இடத்தில, அந்த நேரத்தில எது முக்கியமோ அத மட்டும் போகஸ் பண்ணி செய்யுங்கறாரு… !

ஹீரோ மண்டைக்குள்ள பல்ப் எரியுது..

நம்மாளு குழந்தைய கூட்டிட்டு அவுட்டிங் போறாரு.. அப்ப தான் திரும்பவும் அண்டர்கிரவுண்ட் டான், பிரச்சனைனு சொல்லி கூப்பிடுறாரு.. நம்மாளு என்ன பண்றாரு.. இந்த நேரத்தில குழந்தையோட அவுட்டிங் தான் முக்கியம், – டான் போட்டு தள்ளிடுறாரு..!

அங்க ஆரம்பிக்குற சீரிஸ் பட்டாசு மாதிரி கடைசி எபிஸோடு தான்.. போய் தான் நிக்குது.

Dexter பார்த்திருக்கீங்களா.. அது பிடிக்கும்னா இந்த சீரிஸும் பிடிக்கும்..

மிஸ் பண்ணாதீங்க.. ❤️

கதிரவன்

Spread the love
error: Content is protected !!