May 30, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

இன்றைய பஞ்சாங்கம் & ராசி பலன்!

சுப கிருது வருடம் :

தை மாதம் 22 ஆம் நாள் !

பிப்ரவரி மாதம் : 05 ஆம் தேதி !
(05-02-2023)

ஞாயிற்றுக்கிழமை !

சூரிய உதயம் :
காலை : 06-48 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-18 மணி அளவில்

இன்றைய திதி : வளர்பிறை : பௌர்ணமி !

பௌர்ணமி..
பின் இரவு 12-45 மணி வரை ! அதன் பிறகு தேய்பிறை பிரதமை !!

இன்றைய நட்சத்திரம் :

பூசம்…
பிற்பகல் 01-15 மணி வரை ! அதன்பிறகு ஆயில்யம் !!

யோகம் :
சித்தயோகம் !!

இன்று
சம நோக்கு நாள் !

இன்றும்
தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் !!

ராகுகாலம் :
மாலை : 04-30 மணி முதல் 06-00 மணி வரை !!

எமகண்டம் :
மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!

குளிகை :
மாலை : 03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

சூலம் : மேற்கு !
பரிகாரம் : வெல்லம் !!

கரணம் :
காலை: 10-30 மணி முதல் 12-00 மணி வரை !

நல்ல நேரம் :

காலை :
07-00 மணி முதல் 09-00 மணி வரை !
11-00 மணி முதல் 12-00 மணி வரை !

மாலை :
02-00 மணி முதல் 04-00 மணி வரை !
06-00 மணி முதல் 07-00 மணி வரை !

இரவு :
09-00 மணி முதல் 11-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் :

சுக்ர ஓரை :
காலை : 07-00 மணி முதல் 08-00 மணி வரை !!

புதன் ஓரை :
காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!

சந்திர ஓரை :
காலை : 09-00 மணி முதல் 10-00 மணி வரை !!

குரு ஓரை :
காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :

இன்று
பௌர்ணமி !

இன்று
பௌர்ணமி சம்மந்தப்பட்ட,பௌர்ணமி பூஜை,பௌர்ணமி விரதம்,பௌர்ணமி கிரிவலம் என எல்லாமே !!

இன்று
தைப்பூசம் !!

தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.

தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று அனைத்து முருகன் தலங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.

அதோடு சிவனுக்கும், குருபகவானுக்கும் கூட இந்த நாள் சிறப்புடையதாகும்.

தைப்பூச நாளில் முருகனை விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

மேலும் குடும்பத்தில் செல்வம் பெருகும், கணவன் – மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும்.

இந்நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் மூலம் தீய சக்திகள் நம்மை அண்டாது.

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

மேலும் துன்பம் மறைந்து ஆனந்தம் பெருகும்.

தைப்பூசத்தன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை செய்யலாம்.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும்.

திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் வரன் தேடுபவர்கள் தைப்பூச நன்னாளில் வரன் தேடினால் நல்ல வரன் கிடைக்கும்.

இந்நாளில் திருமணப் பேச்சை ஆரம்பித்தாலே போதும் நல்லவிதமாக முடியும்.
தைப்பூச திருநாளில் பழனி முருகனுக்கு காவடி எடுத்தால்

எந்த தீய சக்திகளும், மாந்திரீகமும், பில்லி, சூனியம், ஏவல் என எதுவும் நம்மை நெருங்காது என்பதுடன்,

அவை அனைத்துமே அஞ்சி நடுங்கி, அடிபணிந்து நமக்கு ஏவல் செய்யும் என்பது ஐதீகம் !!

முருகப்பெருமான் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..

சௌஜன்யம்..

அன்யோன்யம்..

ஆத்மார்த்தம்..!

தேசியம்..!

தெய்வீகம்..! பேரின்பம் …!!

இன்றைய ராசிபலன்

🔯இன்றைய ராசி பலன்🔯

நாள் – 05.02.2023
ஞாயிற்றுக்கிழமை
மேஷம் – வரவு
ரிஷபம் – பயம்
மிதுனம் – நன்மை
கடகம் – செலவு
சிம்மம் – ஆதாயம்
கன்னி – சுகம்
துலாம் – நேர்மை
விருச்சிகம் – கவலை
தனுசு – தாமதம்
மகரம் – லாபம்
கும்பம் – அச்சம்
மீனம் – பகை

Spread the love
error: Content is protected !!