October 16, 2025

Namma Multimedia

The gold mine of tomorrow's world

பார்சிலோனா கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்திய ஜூனியர் அணி சாதனை!

கால்பந்து உலகில் FIFA கோப்பை எவ்வளவு பெரிய மணி மகுடமோ அதே அளவிற்கு பெருமை கொண்டது பார்சிலோனோ கால்பந்து தொடர். 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விளையாடும் சர்வதேச தொடராகும் இது. நடப்பாண்டிற்கான இந்த தொடர் ஏப்ரல் 22ஆம் தேதி ஸ்பெயின் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க பிரேசில், அர்ஜெண்டினா உள்ளிட்ட 36 நாடுகளை சேர்ந்த ஜூனியர் அணிகள் கலந்து கொண்டுள்ளது.

இந்தியாவும் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளது. இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்ட்ஸ் சாக்கர் ஸ்கூல் மாணவர்கள் 14 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 10 வயதுக்குப்பட்டோர் பிரிவில் 10 பேரும், 13 வயதுக்குப்பட்டோருக்கான பிரிவில் 14 பேரும் என இரண்டு பிரிவுகளாகப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்பெயின் அணியுடன் நடைபெற்ற போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை சொந்த மண்ணிலேயே இந்திய அணி வீழ்த்தியுள்ளது.

இதையடுத்து வெற்றி பெற்ற இந்திய அணியினரை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என பலரும் ஊக்கம் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

Spread the love
error: Content is protected !!