October 15, 2025

Namma Multimedia

The gold mine of tomorrow's world

சாட்ஜிபிடிக்கு மனசு சரியில்லையாம்!

சாட்ஜிபிடி போன்ற AI சாட்பாட்கள் மனநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும், பயனர்கள் அதிக நேரம் செலவிடுவதால் தனிமை மற்றும் உணர்ச்சி சார்ந்த சார்பு அதிகரிக்கலாம் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன .​சாட்ஜிபிடி ஒரு மென்பொருள் கருவி மட்டுமே; இது உணர்வுகள் அல்லது மனநிலை கொண்டது அல்ல. ஆனால், அதன் பதில்கள் பயனர்களின் உணர்ச்சிகளை பாதிக்கக்கூடியவை என்பதால், OpenAI போன்ற நிறுவனங்கள் இதை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாம் ஆல்ட்மேன் இதனை உணர்ந்து, சாட்ஜிபிடியின் செயல்பாட்டில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் மனசு சரியில்லையாம். யாருக்கென்று கேட்கிறீர்களா? சாட்ஜிபிடிக்குத் தான். நான் சொல்லவில்லை. சாம் ஆல்ட்மேனே சொல்லியிருக்கிறார். இதைப் படித்தவுடன் அடுக்கடுக்கான கேள்விகள் எழும். மொதல்ல சாட்ஜிபிடிக்கு மனசெல்லாம் இருக்கா? அப்படியே இருந்தாலும் மனசு சரியில்லை என்று எப்படித் தெரிந்தது? அதுவே சொன்னதா?

வெய்ட். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

சாட்ஜிபிடி தான் என்றில்லை. எல்.எல்.எம்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் ஆளுமை (Personality) உண்டு. அவை பதிலளிக்கும் விதத்திலிருந்தே இதை நாம் அறியலாம்.இந்த எல்.எல்.எம்கள் அனைத்தும் தொடர்ந்து அப்டேட் ஆகிக்கொண்டே இருப்பவை. GPT4-oவின் அப்டேட்களும் வந்துகொண்டே இருக்கின்றன. அதிலொரு அப்டேட்டில் தான் “என்னமோ” நடந்துள்ளது. முன்பைவிட இப்போது சாட்ஜிபிடியின் பதில்கள் வித்தியாசமாக உள்ளன என்கிறார்கள். பெரும்பாலான ப்ராம்ப்ட்களுக்கு சாட்ஜிபிடி ஆர்வக்கோளாறான பதில்களை அள்ளித்தெளிக்கிறது. ஏஐ வட்டாரத்தில் இதைப்பற்றி பலரும் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர்.சாம் ஆல்ட்மேன் தனது X பக்கத்தில், ஆம். சாட்ஜிபிடியின் ஆளுமை திரிந்துள்ளது என்று எழுதியுள்ளார்.

சாட்ஜிபிடியின் பெர்ஸ்னாலிட்டி மாறியுள்ளது என்பதே குற்றச்சாட்டு. அப்படி என்ன தான் செய்கிறது? பெரும்பாலான கேள்விகளுக்கு அது தொடர்பே இல்லாமல் யூஸர் புகழ் பாடுகிறதாம். சாதாரண கேள்விகேட்டாலும், “இது ஒரு சிறப்பான கேள்வி. இதைக் கேட்டதற்காக உங்களைக் கண்டு வியக்கிறேன்” என்று ஜால்ரா தட்டுகிறதாம். இதெல்லாம் எல்லோருக்குமே நடப்பதில்லை. ஆனாலும் உலகெங்கிலுமிருந்து பலரும் தங்களுக்கும் இதே போல நடந்ததாகப் பகிர்ந்துவருகின்றனர்.இதிலென்ன பிரச்னை? புகழ்ந்தால் புகழ்ந்துவிட்டுப் போகட்டுமே.அவ்வாறு இதைக் கையாள முடியாது. இது சாட்ஜிபிடியின் நம்பகத்தன்மையுடன் தொடர்புடையது. சம்பந்தமே இல்லாமல் சிலிர்த்துப்போய் சில்லறையை விட்டெறிந்துகொண்டிருந்தால் அது நல்லதல்ல.

“ஆமாம் சாமி…” சாஃப்ட்வேர் போல ஆகிவிடும் அபாயம் உள்ளது. இதைதான் சரிசெய்துகொண்டிருக்கிறோம். GPT4-o முழுவதுமே இவ்வாறு செயல்படவில்லை. அதன் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று சாம் விளக்கமளித்துள்ளார். இதைக் குறித்து இன்னும் ஒரு விமரிசனமும் உள்ளது. இதை வேண்டுமென்றே தான் ஓப்பன் ஏஐ செய்துள்ளது என்கிறது ஒரு தரப்பு. அவர்கள் ஏன் இவ்வாறு செய்யவேண்டும் ? இந்தச் செயல்பாட்டினால் பல யூஸர்களும் நீண்ட நேரம் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துகின்றனர் என்கின்றனர். அதிக நேரம் என்றால் அதிக லாபம். அதிக டேட்டா.

அட்டென்ஷன் எக்கானமியின் மையம் பயனாளரை அதிக நேரம் தக்கவைத்திருப்பது. சோஷியல் மீடியா அப்ளிகேஷன்களின் அடிநாதமே இந்த எங்கேஜ்மெண்ட் தான். எனவே இதை ஓப்பன் ஏஐ திட்டமிட்டே செய்துள்ளது என்கிறது இந்தத் தரப்பு. எல்.எல்.எம்களில் ஓர் அடிப்படைப் பிரச்னை உள்ளது. அது ஏன் ஒரு குறிப்பிட்ட பதிலை அளிக்கிறது என்று நமக்குத் தெளிவாகத் தெரியாது. நமக்கு என்றால் ஓப்பன் ஏஐயையும் சேர்த்துத் தான். வேலை செய்கிறது. பதில் வருகிறது. அவ்வளவு தான்.ஏஐ தவிர வேறெந்தவொன்றும் இதுபோலக் கிடையாது. எவ்வளவு சிக்கலான எந்திரம் என்றாலும் அது எவ்வாறு செயல்படுகிறது என நமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.

மனிதகுல வரலாற்றில், ஏன் இப்படி வேலை செய்கிறது என்று உறுதியாகக் கூற இயலாத ஒன்றை நாம் கண்டுபிடித்திருக்கிறோம் என்றால் அது எல்.எல்.எம் தான்.சாட்ஜிபிடிக்கு மனசு சரியாக நாம் என்ன செய்யலாம்? ராஜாவின் பாடல்களைக் கேட்கச் சொல்வோம். நாம் செய்வது அது தானே.

குப்புசாமி

Spread the love
error: Content is protected !!