September 17, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

எல்லை தாண்டும் ‘டாஸ்க் கிராஸ்ஓவர்’:கார்ப்பரேட் உலகில் புதிய மாற்றம்

செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்துவிடும் என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, நடைமுறையில் அது மனிதர்களின் திறன்களையும் பணி எல்லைகளையும் விரிவுபடுத்தி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. OpenAI அமைப்பின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவு (OpenAI Economic Research) அமெரிக்காவில் உள்ள சுமார் 8,00,000-க்கும் மேற்பட்ட ChatGPT உரையாடல்களைப் பகுப்பாய்வு செய்து இந்த ஆய் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின் மிக முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், 43.5% பணி சார்ந்த உரையாடல்கள் பயனரின் சொந்தத் துறை சார்ந்ததாக இல்லாமல், வேறு துறைகளின் பணிகளை (Task Crossover) மேற்கொள்வதற்காகவே நடந்துள்ளன. அதாவது, ஒரு துறையில் பணிபுரியும் ஊழியர், AI துணையோடு தனக்கு முன்பின் பழக்கமில்லாத மற்றொரு துறையின் பணியையும் எளிதாகக் கற்றுக்கொண்டு செய்து முடிக்கிறார்.

எந்தத் துறை ஊழியர்கள் அதிகம் பயன்பெறுகிறார்கள்?

வழக்கமான வரம்புகளைத் தாண்டி புதிய வேலைகளைக் கற்றுக்கொள்வதில் குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மிக வேகமாக முன்னேறி வருகிறார்கள்:

  • சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் (Marketing): மார்க்கெட்டிங் துறையினர் கோடிங் (Coding) மற்றும் தரவுப் பகுப்பாய்வு (Data Analysis) போன்ற தொழில்நுட்பப் பணிகளை AI மூலம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

  • வாடிக்கையாளர் சேவை & HR (Customer Experience & Human Resources): சட்ட ஆவணங்களை ஆய்வு செய்தல், நிறுவனக் கொள்க வரைவுகளை உருவாக்குதல் போன்ற பணிகளைத் தாங்களே மேற்கொள்கின்றனர்.

  • சட்டத்துறை மற்றும் வடிவமைப்பு (Legal & Design): வரைகலை வல்லுநர்கள் சந்தை ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கும், சட்ட வல்லுநர்கள் தொழில்நுட்ப ஆவணங்களுக்கும் ChatGPT-ஐப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, மார்க்கெட்டிங் மற்றும் என்ஜினீயரிங் சார்ந்த பணிகள் மட்டுமே பெரும்பாலான மற்ற துறைகளுடன் அதிகமாகக் கலப்பதாக (Cross-boundary crossover) இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

சிறிய நிறுவனங்களுக்கு ஏஐ தரும் ‘ஜெனரலிஸ்ட்’ பலம்

ஆராய்ச்சியின் படி, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் அமைப்புகளிலேயே இந்த ‘டாஸ்க் கிராஸ்ஓவர்’ அதிகளவில் நடைபெறுகிறது.

சிறிய நிறுவனங்களில் ஒவ்வொரு தனிப்பட்ட துறைக்கும் (எ.கா. தனி சட்டக் குழு, தனி டேட்டா அனாலிட்டிக்ஸ் குழு) நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவது சவாலானது. அத்தகைய இடங்களில் AI ஒரு ‘பொதுவான உதவியாளராக’ (Generalist Tool) செயல்படுவதால், ஒரே ஊழியர் பல்துறை திறன்களையும் கற்றுக்கொண்டு பல பணிகளைச் சுதந்திரமாக கையாள முடிகிறது.

வருங்கால வேலைவாய்ப்புச் சந்தையில் இதன் தாக்கம்

பாரம்பரிய வேலைவாய்ப்புப் புள்ளிவிவரங்கள் (Traditional Labor Statistics) ஒரு நபர் என்ன பதவியில் இருக்கிறார் என்பதை வைத்து மட்டுமே அவரது திறனைக் கணிக்கும். ஆனால், AI வருகைக்குப் பின் பதவிப் பெயர்களைத் தாண்டி ஊழியர்களின் வேலை செய்யும் திறன் பலமடங்கு விரிவடைந்துள்ளது.

ஒரே துறையில் மட்டுமே நிபுணத்துவம் பெற்ற காலம் மாறி, AI துணையுடன் பல துறைகளின் வேலைகளையும் கற்றுக்கொண்டு கையாளும் ‘மல்டி-ஸ்கில்டு’ (Multi-skilled) ஊழியர்களே எதிர்காலப் பணியிடங்களில் பிரதான இடம் பிடிப்பார்கள் என்பதை OpenAI-ன் இந்த ஆய்வு மிகத் தெளிவாக உணர்த்துகிறது.

Spread the love
error: Content is protected !!