October 19, 2025

Namma Multimedia

The gold mine of tomorrow's world

சிதாரே ஜமீன் பர்

பிரம்மாண்ட பட்ஜெட், இவன் யாரு தெரியுமா ஹீரோ, நாலைஞ்சு ஸ்டேட் ஆக்டர்ஸ், பெரிய ஸ்டார் கேமியோ, முழுக்க முழுக்க இரத்தம், இது எதுவும் இல்லாம ஒரு பெரிய ஸ்டார் படம். சிம்பிளா, அழகா, வாய் முழுக்க பல்லோட சிரிக்க சிரிக்க பார்த்து ரசிக்க பியூட்டிஃபுல் டிராமா.

அமீர்கான் அடுத்த ஹிட் கொடுத்திருக்காரு.. !

2018 ல வந்த ஸ்பானீஷ் படம், Champions அதோட ரீமேக் தான் இது…

intellectual disabilities கொண்ட குழுவினர் இருக்க Aderes team ஸ்பெயின்ல 1999 லருந்து 2014 வரை 12 கப் அடிச்ச உண்மைச் சம்பவத்த அடிப்படையா வச்சு, எடுத்த Champions படம் பல மொழிகள்ல ரீமேக் ஆகியிருக்கு…

ஹீரோ ஒரு இண்டலிஜெண்ட் பாஸ்கட் பால் கோச், ஆனா குணத்தில சரியான முரடு, கோபமும் ஜாஸ்தி. ஒரு முக்கியமான மேட்சுல அவருக்கும் இன்னொரு கோட்சுக்கும் இடையில சண்டை வந்து கைகலப்பாகி விட, அவர டீம விட்டு தூக்கிடுறாங்க.. அந்த நேரத்துல குடிச்சுட்டு அவர் பண்ற ராவடில… ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட் நடக்குது. கோர்ட் அவருக்கு தர்ற தண்டனை, 3 மாசத்துக்கு intellectual disabilities உள்ள ஒரு ஆசிரமத்து டீமுக்கு, பேஸ்கட் பால் கோச்சிங் தரணும்.

வேண்டா வெறுப்பா போய்.. அவங்களோட பழகி, அப்புறம் அந்த டீம எப்படி கப் அடிக்க வைக்கிறாருங்கறது தான் கதை. ஒரிஜினல் கதையில அந்த கப் அடிக்க என்னல்லாம் கஷ்டப்படுறாங்க, அந்த கோச் எப்படிலாம் திட்டம் போடுறாருன்றது விலாவரியா வரும்.. இந்த ரீமேக்ல அத தூக்கிட்டு, நிறைய காமெடி சேர்த்திருக்காங்க… கூடவே இப்ப இந்திய சினிமால மிஸ் ஆகுற ஹுயூமன் எமோசனஸ் அத சரியா கலந்திருக்காங்க…!

ஸ்பாய்லர் …

இந்தப்படத்தோட க்ளைமாக்ஸ் மாத்திட்டாங்க.. ஒரிஜினல விட இந்த க்ளைமாக்ஸ் ரொம்பவே பிடிச்சது….!ஜெயிக்குறது தோக்குறத விட, விளையாடறது அத என்ஜாய் பண்றது எவ்வளவு முக்கியம்..❤️❤️❤️

வெற்றி மட்டுமே வாழ்க்கை ஆயிடாதுல்ல.. அத சொன்ன விதம் அட்டகாசமா இருந்தது.

கல்யாண சமையல் சாதம் எடுத்த நம்ம தமிழ் டைரக்டர் ஆர் எஸ் பிரசன்னா தான் டைரக்டர் அவரோட டிரேட்மார்க் காமெடி 🤣 இதுல பக்காவா ஒர்க் அவுட் ஆகியிருக்கு.. அதுவும் அமீர்கான் அம்மாவ வச்சு வர்ற எபிஸோடு அதகளம்😂

Don’t miss it

கதிரவன்

Spread the love
error: Content is protected !!