October 19, 2025

Namma Multimedia

The gold mine of tomorrow's world

ச்சீச்சீ.. இந்த ட்விட்டர் புளிக்கும்: எலான் மஸ்கிடம் கைமாறும் சூழலில் ட்விட்டர் சி.இ.ஓ. கருத்து!

லகின் பெரும் பணக்காரரும் ,டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் அதிரடிக்கு பெயர் போனவர். மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாகச் சொல்லக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். உக்ரைன் போரில் அந்நாட்டுக்கு முதலில் உதவி செய்ய பலரும் தயங்கிய நிலையில், தன்னுடைய செயற்கைக்கோள் உதவியுடன் அந்நாட்டு மக்களுக்கு இணைய வசதி கிடைப்பதை உறுதி செய்தார். இதற்காக ரஷ்யாவின் கோபத்திற்கும் ஆளானார். இந்நிலையில் அவரை பற்றிய புதிய செய்தி இணைய உலகில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அவர் விரைவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாகவும், இதற்காக ட்விட்டர் நிறுவனத்துக்கு 3.3 லட்சம் கோடி வழங்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் செய்தி வருகிறது. இதற்கிடையே ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை அவர் ஏற்கனவே வாங்கியுள்ள நிலையில், தற்போது அவர் முழு நிறுவனத்தையும் கைப்பற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஊழியர்கள் கூட்டத்தில் பேசிய ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால், “ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் உள்ளதால் அது எந்தத் திசையில் செல்லும் என எங்களுக்குத் தெரியாது” எனத் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இந்தியர் பராக் அகர்வால் பதவி வகித்துவரும் நிலையில், எலான் மஸ்குடனான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அந்த நிறுவனத்தை யார் வழிநடத்துவார் என்பது டெக் உலகில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Spread the love
error: Content is protected !!